கோவை – யில் உறவுகளும், நண்பர்களும் பங்கு கொண்ட தென்மொழியாரின் முதலாண்டு நினைவேந்தல்!

தமிழறிஞரும், பகுத்தறிவுப் பாவலர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பெரும்புலவர் ஐயா தென்மொழி ஞானபண்டிதனார் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் கோவை மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை எதிரில், 42, நாராயண குரு சாலையில் உள்ள ”ஹோட்டல் எஸ்.பி.ஆர். இன்” – னில் சென்ற 21-04-2019, காலை10.00 மணிக்கு தமிழ்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் (பேரூர் ஆதினம்) அவர்கள் தலைமையில் தொடங்கியது.

தமிழ்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் (பேரூர் ஆதினம்) அவர்கள் ஐயா தென்மொழி ஞானபண்டிதனார் தனது சிறு வயதிலேயே சிவக்கவிமணி ஐயா திரு. சி.கே.சுப்பிரமணிய முதலியாரால் உரை எழுதப்பட்ட சேக்கிழாரின் பெரியபுராணத்தில் (திருத்தொண்டர் புராணம்) 7ம் பகுதியில் வாழ்த்திப் பாடியதை நூலின் 84ம் பக்கம் பதிப்பித்துள்ளனர் என்பதை பெருமைபட கூறி சிறப்பித்தார். கோவைத்தமிழ்ச் சங்கத்தின் சார்பாக திருத்தொண்டர் புராணம் உரை 15.09.1937ல் முதன்முதலாக முதல் தொகுதி வெளியிடப் பெற்றது. பெரியபுராண நிறைவு உரைப்பகுதி 06.05.1954ல் வெளியிடப் பெற்றது என்பதையும் குறிப்பிட்டு ஐயா தென்மொழி ஞானபண்டிதனாரின் வாழ்த்து இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதை சூட்டிக் காட்டி அதன் பெருமைகளை விளக்கினார்.

நினைவேந்தலில் பங்கெடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக திரு. ப. குணசேகரன், திரு. தேவராஜ் (வேளாளர் கூட்டமைப்பின் தலைவர்), திரு. எஸ்.பி.ராஜேந்திரன் (கொங்கு அமைப்பின் தலைவர்), திரு. கு.ராமகிருஷ்ணன் (தந்தை பெரியார் தி.க – வின் தலைவர்), என ஏராளமானோர் வந்திருந்தனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு குடும்பத்தாரோடு, அவரின் பெருமைகளை அறிந்த நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள், அவரோடு பயணித்த திராவிட அமைப்பின் நண்பர்கள் என பலரும் வந்திருந்து சிறப்பித்தனர். மதிய விருந்துண்டு மகிழ்ச்சியோடு அனைவரும் சென்றனர்.

புகைப்பட தொகுப்பைப் பார்க்க…. இங்கே சொடுக்கவும்.