தென் மொழி ஞானபண்டிதனாரின் வாழ்க்கைப் பயணம்….

பெயர் : ஞானபண்டிதன்

ஊர் : ஆனைமலை {கோவை மாவட்டம்}

பெற்றோர் : இரா. கிருட்டிணசாமி – சுப்பாத்தாள்

பிறந்தநாள் : 03.05.1933

குடும்பத் தொழில் : வேளாண்மை (வெற்றிலைத் தோட்டம்)

உடன் பிறந்தார் : தமையன்மார் இருவர் {தமக்கை, தங்கை}

கல்வி : பள்ளி இறுதி வகுப்பு (உள்ளூர்)

புலவர் படிப்பு : பேரூர்த் தமிழ்க் கல்லூரி – தருமபுர ஆதீனத் தமிழ்க் கல்லூரி

புலவர் பட்டம் : சென்னைப் பல்கலைக் கழகம்

ஆசிரியர் பயிற்சி : குமாரபாளையம்

இளங்கலை பி.லிட்.,

முதுகலை எம்.ஏ., : சென்னைப் பல்கலைக் கழகம்

ஆசிரியர் பட்டம் பி.எட்., : அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

பணி :

தமிழாசிரியர் – கோவை மாநகராட்சி உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் (33-ஆண்டுகள்)

மணவாழ்க்கை :

கோவை சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணியனார் தலைமையில் (1958) திருமணம்

வாழ்க்கைத் துணைவர் :

ஜி. இராசாமணி

மக்கள் :

ஞான சுப்பிரமணியன் பி.காம்.,
ஞான எழிலி பி.எஸ்.சி.,
இனியன் ஞானபண்டிதன் பி.இ., எம்.பி.ஏ,

தமிழ்த் தொண்டு :

பட்டிமன்றம் – கவியரங்கம், இலக்கியப் பொழிவு, வானொலிப் பொழிவு

தமிழ் எழுத்துப்பணி :

இதழ் – மலர்களுக்கு, கவிதை – கட்டுரைகள் எழுதுதல்

நூலாக்கம் :
கவிதை நூல்கள் :

மலர்க்கொத்து, வாழ்வுக்கு வழிகாட்டி, தமிழாயிரம், சிறுவர் செந்தமிழ்ப் பாடல்கள்

உரைநடை நூல்கள் :

தந்தை பெரியாரின் சிந்தனைத் திறவுகோல்
இந்தியப் பெருமையின் முன்னோடிகள்
திருக்குறள் சிறப்பியல் களஞ்சியம்
முதிர்ந்த முத்துக்கள்
பெரியார் வாழ்வியல் வள்ளுவர் பார்வை
வாழும் தமிழ் ! புவி ஆளும் தமிழ் !
கரை கண்ட மாவீரன் – கொலம்பசு
பெரியாரின் நாகரிகக் கோட்ப்பாடு
ஈடில்லா இமயம்!

பொதுப்பணியில் பொறுப்பு :

கோவை கவிஞர் மன்றம் – தலைவர்
கோவை மாவட்டத் தமிழாசிரியர் கழகம் – பொருளர்
திருக்குறள் ஆய்வுக்கழகம் – பொருளர்
கவிஞர் சக்திக்கு கனல் தலைமை – அனைத்திந்தியத் தமிழ்
எழுத்தாளர் சங்கம் கோவை – செயலர்
கோவை மாநகர மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் – பொருளர்
பகுத்தறிவு ஆசிரியர் அணி – தலைவர்
டாக்டர் பூவண்ணன் தலைமை
கோவை மாவட்ட அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், கோவை – பொருளர்
கோவை மாவட்ட திராவிடர் கழகம் – தலைமை
பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி – அமைப்பாளர்.

சீரிய தொண்டு :

தமிழில் பெயர்ப்பலகை வைத்திடம் போராட்டம்
திராவிடர் கழகத்தின் சார்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டம் – சிறை
”கோவை முத்தமிழ் மன்றம்” தொடங்குதல்
கோவை திருக்குறள் மாநாடு (1994)
மாநிலப் பகுத்தறிவாளர் கழக மாநாடு
”தமிழ் வழிக்கல்வி ” – பேரணி – கூட்டம்
வ.சுப. மாணிக்கனார் – மதுரை முத்து பங்கேற்பு
திராவிடர் கழகத்தின் சார்பாக அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க மறியல் போராட்டம் – சிறை

சிறப்புப் பங்கேற்பு :

1989 – டாக்டர் வாசவன் தலைமையில் தில்லியில் நடந்த அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு

1992 – சென்னையில் நடந்த உலகளாவிய பன்னட்டுத் தமிழுறவு மன்ற இரண்டாவது மாநாடு

1993 – டாக்டர் வனவாசம் தலைமையில் பம்பாயில் நடைபெற்ற அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் திருக்குறள் மாநாடு

1999 – பெங்களூர்த் தமிழ் சங்கத்தில்

1. ”தமிழாயிரம்” கவிதை நூல் வெளியீட்டு விழா
2. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ” நூற்றாண்டு” விழாக் கவியரங்கம் – தலைமை ஏற்பு
3. தமிழ் சங்கத் திங்கள் ஏரிக்கரைக் கவியரங்கங்களில் பங்கேற்பு
4. ”திருக்குறள் சிறப்பியல் களஞ்சியம்” நூல் அறிமுக விழா ”குறல் மாமணி” விருது

பன்னட்டுத் தமிழுறவு மன்றம் ஐந்தாவது மாநாடு – மதுரை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராசன் அவர்களால் ”திருக்குறள் சிறப்பியல் களஞ்சியம்” அறிமுக விழா

பெற்ற விருதுகள் :

”தென்மொழி” முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் வழங்கிய சிறப்பு பெயர்
”புலவர் மணி” காரைக்குடி திருக்குறள் கழகம்
”பாவலர்” பன்னட்டுத் தமிழுறவு மன்றம் – கோவை
”திருக்குறள் படைப்புச் செம்மல்”
”திருக்குறள் சான்றோர்” திருக்குறள் உயராய்வு மையம் – சென்னை
”இலக்கிய மாமணி” திருவள்ளூர் பச்சையப்பனார் திருக்குறள் பேரவை
”பகுத்தறிவுப்பாவலர்” கவிக்கொண்டல் குழு – சென்னை
”குறல் மாமணி” பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்
”தமிழ்ப் பணிச் செம்மல்” பன்னட்டுத் தமிழுறவு மன்ற மாநாடு – மதுரை
”தமிழண்ணல்” கோவை அவிநாசிலிங்கம் அறக்கட்டளைப் பெருமன்றம்.
”பெரியார் பெருந்தொண்டர்” பெரியார் திடல் – சென்னை
”பாரதி பணிச்செல்வர்” (எட்டையபுரம்) அனைத்திந்தியத் தமில் எழுத்தாளர்கள் சங்கம் – சென்னை.